top of page

பணி

தரிசனம்

இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை உலகுக்கு அறிவிக்கும் நோக்கத்திற்காக எங்கள் நிறுவனர் மற்றும் தலைவர் Rev. Dr. M.சுந்தர் ஷா அவர்களுக்கு தேவன் அளித்த தரிசனத்தின் அடிப்படையில் GLP ஊழியங்களின் பணி மற்றும் நோக்கங்கள் பின்வருமாறு:

 

1. பிதாவாகிய தேவனுடைய கிருபையால் வழங்கப்பட்ட குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் மூலம் கடவுளுடைய மக்களை அன்பு, நம்பிக்கை மற்றும் பரிசுத்த ஆவியின் வல்லமையுடன் கட்டியெழுப்புதல்.

2. தீர்க்கதரிசன ஆசீர்வாதக் கூட்டங்கள், உபவாசக் கூட்டங்கள், கல்லூரி சந்திப்புகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக வலைதளங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் மூலம் கடவுளின் இரட்சிப்பு, வார்த்தை மற்றும் அவரது விடுதலையைப் பறைசாற்றுதல்.

 

3. உள்ளூர் பிரார்த்தனைக் குழுக்களை அமைத்து விசுவாசிகள் ஒவ்வொருவரையும் விசுவாசத்திலும், வார்த்தையிலும் பலப்படுத்துவதன் மூலம் கடவுளின் விடுதலை தேவைப்படும் தங்கள் சமூகத்தை அவர்கள் சென்றடைய செய்வது.

 

4. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை சீஷராக்குவது, ஜெபத்திலும் வார்த்தையிலும், பரிசுத்த ஆவியிலும் பலமாக்குவது. இதனால் அவர்கள் நற்செய்தியை கிறிஸ்துவின் சீஷர்களாக தேசங்களுக்கு கொண்டு செல்ல செய்வது.

 

5. இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்வதற்காக பிரார்த்தனை மற்றும் கற்பித்தல் முகாம்களை நடத்துவது.

 

6. கோடைகாலத்தில் விடுமுறை வேதாகம பள்ளி (VBS) வாயிலாக சிறு பிள்ளைகளுக்கு இயேசு கிறிஸ்துவையும், அவருடைய வார்த்தையையும், கற்றுக்கொடுத்து உலக சவால்களை எதிர்கொள்ள அவர்களை ஆயத்தப்படுத்துவது.

7. கர்த்தருடைய வார்த்தையினாலும், பரிசுத்த ஆவியினாலும் இளைஞர்களை மேம்படுத்த, இளைஞர் முகாம்கள் மற்றும் கூட்டங்கள் நடத்தி, கர்த்தரின் இரட்சிப்பு மற்றும் பரிசுத்த ஆவியின் வல்லமையால் அவர்கள் முன்னேறிச் செல்ல ஊக்குவிப்பது.

 

8. தேவைப்படுபவர்களுக்கு உதவவும், சமூக வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கவும், சமூக நல நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது.

© பதிப்புரிமை 2021 GLP ஊழியங்கள் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை

bottom of page